Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Rain Update: இடி, மின்னல், மழை எல்லாமே இருக்கு. எங்கேன்னு பாருங்க!

Rain Update: இடி, மின்னல், மழை எல்லாமே இருக்கு. எங்கேன்னு பாருங்க!

Minnambalam 2 years ago

மிழ்நாட்டில் தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு மழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று (ஏப்ரல் 1௦ ), தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 11, 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்சமாக திருப்பத்தூரில் 41.6° டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரோட்டில் 4௦.௦° டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 35.1° செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 34.5° செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை", என்று தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை.

தென் தமிழக மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.

-மஞ்சுளா

ராமநாதபுரம்: ஓபிஎஸ்சின் 'கேரன்ட்டி' வாக்குறுதிகள்!

ஹீரோவான பிக்பாஸ் போட்டியாளர்… சரியான ஜாக்பாட்… ரசிகர்கள் வாழ்த்து..!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam