Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"ரத்னம்" புது பாடல் : அக்கற காட்டும் விஷால்.. உருகும் பிரியா பவானி சங்கர்..!

"ரத்னம்" புது பாடல் : அக்கற காட்டும் விஷால்.. உருகும் பிரியா பவானி சங்கர்..!

Minnambalam 2 years ago

யானை படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் தயாராகி உள்ள படம் "ரத்னம்".

இது விஷாலின் 34 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஹரியும் விஷாலும் இணைந்து பணியாற்றியுள்ள ரத்னம் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க, நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஶ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், போஸ்டர்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் ஹரி ஸ்டைலில், விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட ஒரு பக்கா கமர்ஷியல் ஆக்சன் படமாக ரத்னம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ரத்னம் படத்தின் செகண்ட் சிங்கிள் "எதனால எதனால என்மேல அக்கற" பாடல் இன்று (மார்ச் 29) வெளியாகி இருக்கிறது. பாடலாசிரியர் விவேகா வரிகள் எழுத, சிந்தூரி விஷால் இப்பாடலை பாடியிருக்கிறார்.

நடிகர் விஷாலும், நடிகை பிரியா பவானி சங்கரும் இடம் பெற்றுள்ள இந்த பாடலில், தனது காதலை முழுமையாக வெளிப்படுத்தாத ஹீரோவை பார்த்து ஹீரோயின் காதல் உருக்கத்துடன் கேள்வி கேட்பது போன்று வரிகள் எழுதப்பட்டிருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam