Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சண்டே ஸ்பெஷல்: பொரித்த மீன் பிரியரா நீங்கள். இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

சண்டே ஸ்பெஷல்: பொரித்த மீன் பிரியரா நீங்கள். இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

Minnambalam 2 years ago

'அரை கிலோ மீனோ, ஒரு கிலோ மீனோ… நம் வசதிக்கு ஏற்றவாறு அழகாக வெட்டி வாங்கி… மஞ்சள் தூள் போட்டு இரண்டு, மூன்று முறை கழுவி மிளகாய்த் தூள், இஞ்சி- பூண்டு விழுது, கொஞ்சம் எலுமிச்சைச்சாறு போட்டு கலந்து ஊற வைத்து…சூடான எண்ணெயில் மொறு மொறுவென பொரித்து வாயில் எடுத்து வைத்தால்…' - குழம்பில் போட்ட மீனைச் சாப்பிட மறுப்பவர்கள்கூட இப்படிப் பொரித்தெடுத்த மீன்களை ஒருகை பார்ப்பார்கள்.

இப்படிப்பட்டவர்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்து யோசித்திருப்பார்களா என்று கேள்வியெழுப்புகிறார்கள் உணவியல் ஆலோசகர்கள்.

மீனில் இருக்கும் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இரண்டும் எலும்பு மற்றும் தசைகளை வலிமையடையச் செய்யும்.

வைட்டமின் டி குறைவாக உள்ளவர்கள் மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது. மீன் சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கும் உதவும். மீனில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், இதய நோய் வராமல் தடுக்கக்கூடியது என்கிறது ஓர் ஆய்வு.

மீனில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்பவர்களும் தாராளமாக மீன் உண்ணலாம். குழந்தைகள் மற்றும் பருவ வயதில் இருப்பவர்களுக்கு மீன் உணவுகள் மிக மிக அவசியம்.

இது அவர்களது வளர்ச்சிக்கு நன்கு உதவும். இத்தனை நன்மைகள் இருக்கும் மீனை பொரித்துச் சாப்பிட்டால், இந்த நன்மைகளே தீமைகளாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறார்கள்.

"மீனை எண்ணெயில் பொரித்து எடுக்கும்போது கெட்ட கொழுப்புச்சத்து அதிகமாகிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படலாம். எண்ணெயில் பொரித்து எடுப்பதால் எடை மற்றும் ரத்த அழுத்தம் அதிகமாகலாம்.

இப்போதைய சூழ்நிலையில் வளரும் மீன்களின் மீது அந்த நீரில் உள்ள துத்தநாகம், மெர்குரி போன்ற உலோகங்களின் கழிவுகள் படிகின்றன. அந்த மீனைப் பொரித்து சாப்பிடுபவர்களுக்கு அவை அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

எனவே, மீனைத் தேர்ந்தெடுக்கும்போது அதைப் பிடித்து எத்தனை நாட்கள் ஆகின்றன என்பதைத் தெரிந்துக்கொண்டு வாங்குங்கள். மேலும், மீனை சமைத்த பின் சரியான வெப்பநிலையில், சுத்தமான பாத்திரத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். மீனில் அதிக புரதச்சத்து இருப்பதால், அது கெட்டு விடுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். எனவே, சமைத்ததும் ஃப்ரெஷ்ஷாக சாப்பிட்டு விடுவது சிறந்தது. இந்த நிலையில் மீனை பொரித்துதான் சாப்பிட வேண்டும் நினைப்பவர்கள் க்ரில் செய்து, பேக்கிங் (Baking) செய்து, வேகவைத்து சாப்பிடலாம்" என்று அறிவுறுத்துகிறார்கள்.

கொஞ்சம் ரிலாக்ஸ்… ஏடிஎம்ல ஏசி காத்து: அப்டேட் குமாரு

ஜம்மு காஷ்மீர்: விமானப்படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!

பாட்டுக்கு இசையா? இசைக்கு பாட்டா?: இளையராஜா வைரமுத்து விவகாரம் குறித்து சினேகன் பேச்சு!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதியின் புதிய மாசெக்கள் பட்டியல்? - லண்டன் பயணம் முடிந்ததும் திமுகவில் லக்கலக்கா…

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam