Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சென்னை சென்ட்ரல் முதலிடம்: எதில்னு கெஸ் பண்ணுங்க!?

சென்னை சென்ட்ரல் முதலிடம்: எதில்னு கெஸ் பண்ணுங்க!?

Minnambalam 2 years ago

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில் நிலையங்களில் அதிக வருவாய் ஈட்டும் பட்டியலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே வழித்தடங்களைக் கொண்ட நாடு இந்தியா. நாட்டில் 7,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள்.

பயணிகள் ரயில் மட்டுமல்லாமல் ரயில்கள் மூலம் சரக்கு போக்குவரத்தும் பெரிய அளவில் நடைபெறுகிறது. சரக்கு ரயில் போக்குவரத்து அதிக லாபம் ஈட்டும் துறையாக உள்ளது.

இந்தியாவிலேயே அதிக வருமானம் வரும் துறையாக ரயில்வே இருந்து வருவதால் ரயில்வேக்கு தனி பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ரயில்வே துறையில் 2023 - 2024-ம் ஆண்டுக்கான ஆண்டு வருவாய் குறித்த தகவலை இந்திய ரயில்வே பொது தளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மண்டலங்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024-ம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு 12,020 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

தெற்கு ரயில்வே பயணிகளிடமிருந்து ரயில் கட்டணமாக 7,151 கோடி ரூபாயும், சரக்கு ரயில் கட்டணம் மூலம் 3,674 கோடி ரூபாயும் இதர வகையில் 1,195 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், இந்தப் பட்டியலில் கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களில் தமிழ்நாட்டின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வருவாய் 1,215 கோடியே 79 லட்ச ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தெற்கு ரயில்வே ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது.

இதேபோல, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இரண்டாவது இடத்திலும், கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

திருவனந்தபுரம் நான்காவது இடத்திலும், தாம்பரம் ஐந்தாவது இடத்திலும், எர்ணாகுளம் ஆறாவது இடத்திலும் உள்ளன.

அடுத்து, மதுரை ரயில் நிலையம் ஏழாவது இடத்தையும், கோழிக்கோடு எட்டாவது இடத்தையும், திருச்சூர் ஒன்பதாவது இடத்தையும், திருச்சி ரயில் நிலையம் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராஜ்

"பட்டாசுகள் வாங்கி வைத்திருந்தோம்": ரிங்கு சிங்கின் தந்தை உருக்கம்!

ஹெல்த் டிப்ஸ்: வெயிலுக்கு வெல்கம் சொல்வோம்… ஏன், எதற்கு?

பியூட்டி டிப்ஸ்: 'நான் ஏன் அழகாக இல்லை?' என்று நினைப்பவரா நீங்கள்?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam