Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தள்ளாடி விழுந்த பார்.பின்னணி என்ன?

தள்ளாடி விழுந்த பார்.பின்னணி என்ன?

Minnambalam 2 years ago

சென்னை மாநகரத்தில் ஆர்.ஏ.புரத்தில் உள்ள ரேடியோரூம் பாருக்கு அடுத்தபடியாக ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலை அடையார்கேட் எதிரில் அமைந்திருந்த ஷேக்மெட் பப் (Sekhmet Pub) பிரபலமான ஒன்று.

இது உயர் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், சினிமா துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் பணக்காரர் வீட்டு பிள்ளைகள் வந்து செல்கின்ற பப் ஆகும். மார்ச் 28 வியாழன் இரவு 7 மணியளவில் இந்த பப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 ஊழியர்கள் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இந்த பாருக்கு சீல் வைத்துள்ளனர்.

இந்த பப்பில் ஆண்-பெண் ஜோடியாக வரும் Couples-க்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆண்கள் கட்டாயமாக ஷூ அணிந்திருக்க வேண்டும். தனிநபராக யார் வந்தாலும் அனுமதி கிடையாது. வருபவர்களை கண்காணிக்க 10-க்கு மேற்பட்ட பவுன்சர்களை நியமித்துள்ளனர்.

இரண்டு Couples ஆக 4 பேர் உள்ளே சென்று வந்தால் குறைந்தபட்சம் 7,000 ரூபாய் பில் போடுவார்கள். கீழ் தளத்தில் 50 பேர் உட்காரும் அளவிற்கும், மேல் தளத்தில் 50 பேர் உட்காரும் அளவிற்கும் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.

 ஷேக்மெட் பாரின் விலை பட்டியல்

மேலும் கீழும் டிஜே நடக்கும். நவீன முறையில் ஒரு திரை அமைக்கப்பட்டு, அந்த திரையில் ஓடும் காட்சியை மேல் தளத்தில் மற்றும் கீழ் தளத்தில் அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கீழ் தளத்திலிருந்து மேல் தளத்தில் செல்வதற்கு இரும்பால் செய்யப்பட்ட படிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேல் தளத்தில் டிஜே மட்டும் ஓடும். கீழ் தளத்தில் Couples மனமகிழ்வோடு ஆட்டம் போடுவார்கள். போதை உச்சத்திற்கு ஏறும்போது பல நேரங்களில் Couples மாறியும் கட்டிப்பிடித்து ஆட்டம் போடுவதுண்டு.

இந்த பார் அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, மைக்ரோ ப்ரூவரி (Micro brewery) என்கிற, பார் அமைந்துள்ள இடத்திலேயே வகை வகையான பீர் தயாரிக்கும் யூனிட் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக லைசென்ஸ் பெற முயற்சி செய்தபோது லைசென்ஸ் கிடைக்காததால், ரெஸ்டோ பாராகத் துவங்கி பப் பாராக நடந்து வருகிறது.

சமீபத்தில் அந்த வழியாக மெட்ரோ லைன் போவதால் ஷேக்மெட் பாரை அகற்ற பிளானிங் இருந்தது. ஆனால் பார் நேரடி மற்றும் மறைமுக உரிமையாளர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜக மத்திய அமைச்சரின் உதவியுடன் அந்த பிளானிங்கை ரத்து செய்து ஷேக்மெட் பாரை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த பாருக்கும் ரேடியோ ரூம் பாருக்கும் மட்டும் காவல்துறையின் சிறப்பு அனுமதி உண்டு. வழக்கத்திற்கு மாறாக இரவு 2 மணியைக் கடந்தும் திறந்திருக்கும். ஏற்கனவே இந்த பாரில் சில அடிதடி சம்பவங்களும் நடந்துள்ளது.

அந்த பாரில் கீழ்த் தளத்தில் டான்ஸ் ஆடும் பகுதியில் டிசைனுக்காக சுமார் 100 சதுர அடி அளவில் கான்கிரீட் போடப்பட்டிருந்தது தான் இப்போது விழுந்து இந்த விபத்து நடந்துள்ளது. இந்த பார் முழுமையாக கல், சிமெண்ட் மற்றும் மணலால் உருவாக்கப்பட்டதல்ல. முழுக்க முழுக்க டிசைனுக்காக இரும்பு ஆங்கிள் கம்பிகள் கொண்டதாகவும், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சிமெண்ட், செங்கல் மற்றும் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நடுவில் போடப்பட்ட கான்கிரீட் நான்கு பக்கமும் சரியான பிடிப்பு இல்லாததால் பில்டிங் அதிரும் அளவிற்கு அதிகமான ஸ்பீக்கர் சத்தத்தாலும், அருகில் மெட்ரோ வேலை நடக்கும் அதிர்வுகளாலும் இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்கள் தயாரித்த பிளானின் படி அப்போதே அந்த பாரை அகற்றியிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. மூன்று உயிர்களும் பறிபோயிருக்காது. ஆனால் இவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மெட்ரோவின் பிளானை மாற்றி அதே இடத்தில் பாரை தொடர்ந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது.

வணங்காமுடி

IPL 2024: சென்னை கேப்டன் ருதுராஜின்… சொத்து மதிப்பு எவ்ளோன்னு பாருங்க!

பீகாரில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கிய லாலு!

நாளை முதல் OMR சாலையில் போக்குவரத்து மாற்றம்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam