Dailyhunt
Tamil Nadu Election Results 2026 : கோவையில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தவெக தொண்டர்கள்!

Tamil Nadu Election Results 2026 : கோவையில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தவெக தொண்டர்கள்!

Minnambalam 1 week ago

மிழகத்தில் 17ஆவது சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளில் 109 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது. இதில் அதிமுக 63 தொகுதிகளிலும், திமுக 40 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட நடிகர் விஜயின் தவெக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முன்னிலை பெற்றுள்ளது. இது தவெக தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கோவையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜி.சி.டி. கல்லூரி வாயில் முன்பு, தடாகம் சாலை அருகே தவெக தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam