Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழ்நாடு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டு: வைகோ வலியுறுத்தல்!

தமிழ்நாடு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டு: வைகோ வலியுறுத்தல்!

Minnambalam 2 years ago

மிழ்நாட்டைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களும் தபால் மூலம் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 19ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், தமிழகம், கேரளவிலுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை இல்லை என குறிப்பிட்டுள்ளது.

இது 100 சதவிகித வாக்குப்பதிவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (மார்ச் 30) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "2021 ஆம் ஆண்டுக்கு முன்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் தபால் வாக்கு வழங்கும் முறை இருந்தது.

மற்ற அத்தியாவசிய பணியில் இருப்போர்க்கு தபால் வாக்கு என்பது இல்லை. 2021 ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையம் அத்தியாவசிய பணியில் இருக்கும் ரயில்வே தொழிலாளர்களுக்கு, தபால் வாக்கு வழங்க உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், ஒன்றியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் ஒவ்வொரு மாநிலம் வாரியாக எந்த எந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தபால் வாக்குரிமை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் பணி புரியும் ரயில்வே ஊழியர்களுக்கு இந்த தபால் வாக்குரிமை வழங்கப்படவில்லை.

இந்த அறிவிப்பின்படி, தேர்தல் நாளன்று பணிபுரியும் ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்கள், வண்டி மேலாளர் மற்றும் ஓடும் இரயிலைச் சார்ந்து பணி புரியும் அனைத்து ஊழியர்களும் தங்களது வாக்குகளை முழுமையாக செலுத்த இயலாது என்பது மிகவும் பின்னடைவாகும்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழக இரயில்வே ஊழியர்கள் தபால் வாக்களிக்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பானை ஒருதலைப்பட்சமானது. கண்டனத்துக்குரியது.

இது ரயில்வே ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருகில் உள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் வாக்களிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

தமிழகத்தில் மற்ற பிற பொதுத் துறை நிறுவனங்கள் தபால் வாக்கு செலுத்த உரிமை உள்ள நிலையில் தமிழக ரயில்வே தொழிலாளிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

எனவே தேர்தல் ஆணையம் இது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

பிரியா

சித்தார்த் அடுத்த படத்தின் இயக்குநர் இவரா..?

பானை சின்னம் உறுதியாக விசிகவிற்கு ஒதுக்கப்படும் - திருமாவளவன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam