Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழ்நாட்டின் 'டாப் 3' வெப்ப மாவட்டங்கள் இதுதான்!

தமிழ்நாட்டின் 'டாப் 3' வெப்ப மாவட்டங்கள் இதுதான்!

Minnambalam 2 years ago

மிழ்நாட்டில் அதிக வெப்பநிலை பதிவான 'டாப் 3' மாவட்டங்கள் குறித்து, வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றும் (மார்ச் 11), நாளையும் (மார்ச் 12) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

இந்த இரண்டு தினங்களில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை", என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகம் பதிவாகியுள்ள இடங்கள் குறித்தும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் கடந்த சிலநாட்களாக வெப்பநிலையில் முதலிடத்தை தக்க வைத்திருந்த ஈரோட்டை (38 டிகிரி செல்சியஸ்) பின்னுக்குத்தள்ளி, நாமக்கல் மாவட்டத்தின் கரூர் பரமத்தி 38.5 டிகிரி செல்சியஸ் உடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

முதல் இரண்டு இடங்களை முறையே நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் பிடித்துள்ள நிலையில் மூன்றாவது இடத்தை மதுரை 37.2 டிகிரி செல்சியஸ் உடன் பிடித்துள்ளது.

வட தமிழக மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர்.

தென் தமிழக மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.

உள் தமிழக மாவட்டங்கள்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர்.

கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர். தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, கள்ளக்குறிச்சி.

வட தமிழக உள் மாவட்டங்கள்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்.

நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர்.

தென் தமிழக உள் மாவட்டங்கள்: சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி.

கடலோர தமிழக மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.

வட தமிழக கடலோர மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.

டெல்டா மாவட்டங்கள்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர்.

-மஞ்சுளா

தேர்தல் பத்திரங்கள் வழக்கு: எஸ்பிஐ கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

'இனிமே அது கெடையாது' வாடிக்கையாளர்களுக்கு 'ஷாக்' கொடுத்த நிறுவனம்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam