Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தற்போதைய நிலவரப்படி தொங்கு சட்டசபையா? 233 தொகுதிகளில் 111 இடங்களில் தவெக முன்னிலை!

தற்போதைய நிலவரப்படி தொங்கு சட்டசபையா? 233 தொகுதிகளில் 111 இடங்களில் தவெக முன்னிலை!

Minnambalam 2 weeks ago

மிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று (மே 4) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், தமிழகத்தில் முதல் முறையாகத் தேர்தல் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது.

233 தொகுதிகளின் முன்னிலை நிலவரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் தவெக 111 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் அதிமுக 60, திமுக 41, பாமக 6, காங்கிரஸ் 5, பாஜக 3, சிபிஐ எம் 2 இன்னும் 2 தொகுதிகளில் முன்னிலை வெளியாக வேண்டும். பெரும்பான்மைக்குத் தேவை 118 இடங்கள்.

தற்போதைய நிலவரப்படி எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமையும் நிலை உருவாகியுள்ளது.

தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் காங்கிரஸ் அல்லது பாமக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தால், தமிழகத்தில் இம்முறை தொங்கு சட்டசபை அமையும் வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam