Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி: பாமக வேட்பாளர் மாற்றம்!

தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி: பாமக வேட்பாளர் மாற்றம்!

Minnambalam 2 years ago

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காஞ்சிபுரம் தவிர்த்து பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 22) காலை வெளியானது.

அதன்படி திண்டுக்கல் - ம.திலகபாமா, அரக்கோணம் - கே.பாலு, ஆரணி - அ.கணேஷ் குமார், கடலூர் - இயக்குநர் தங்கர் பச்சான், மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார், தருமபுரி - அரசாங்கம், சேலம் - ந. அண்ணாதுரை, விழுப்புரம் - முரளி சங்கர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பசுமை தாயகத்தின் தலைவரும், பாமக தலைவர் அன்புமணியின் மனைவியுமான செளமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam