Dailyhunt
தவெகவிற்கு ஆதரவா ? ஐயூஎம்எல் விளக்கம்

தவெகவிற்கு ஆதரவா ? ஐயூஎம்எல் விளக்கம்

Minnambalam 1 week ago

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த போதிலும், ஆட்சி அமைக்க தவெக விற்கு மேலும் 11 இடங்கள் தேவைப்படுகின்றன.

இந்நிலையில் தவெகவிற்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என ஐயூஎம்எல் தெரிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஐ.யு.எம்.எல். கட்சி தவெகவிற்கு ஆதரவு அளிக்கப்போவது இல்லை என அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.யு.எம்.எல். கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் கூறுகையில், "திமுக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறவு என்பது தேர்தல் காலத்து உறவு அல்ல. இது கொள்கை ரீதியான கூட்டணி.

முத்துவேல் கருணநிதி ஸ்டாலின் உடன் நேற்றும் இருந்தோம். இன்றும் இருக்கிறோம். நாளையும் இருப்போம்" என தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam