Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தெலுங்கு இயக்குநர்களின் கூட்டணியில் தனுஷ்

தெலுங்கு இயக்குநர்களின் கூட்டணியில் தனுஷ்

Minnambalam 2 years ago

கேப்டன் மில்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷின் 50 வது படமான ராயன் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், தனுஷின் 51 வது படமான குபேரா படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. குபேரா படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வாத்தி படத்திற்குப் பின் தனுஷ் படத்தை இயக்கும் இரண்டாவது தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விரட்ட பர்வம் என்ற தெலுங்கு படத்தை இயக்கிய வேணு உடுகுலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இந்தப் படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இது குறித்த எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தனுஷ் நடிக்க உள்ள ஓர் புதிய படத்தை மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குநர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் ஸ்ரீகாரம் என்ற திரைப்படத்தை இயக்கிய கிஷோர் சொன்ன கதை நடிகர் தனுசுக்கு பிடித்துள்ளதாகவும் அதனால் தனுஷ் அவர் இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி, சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, என ஏற்கனவே இரண்டு தெலுங்கு இயக்குநர்களின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நிலையில், தற்போது அவரின் அடுத்தடுத்த படங்களை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்கள் இயக்க இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam