Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தேமுதிக விருப்ப மனு விநியோகம் எப்போது? : அறிவித்த பிரேமலதா

தேமுதிக விருப்ப மனு விநியோகம் எப்போது? : அறிவித்த பிரேமலதா

Minnambalam 2 years ago

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் நாளை மறுநாள் (மார்ச் 19) விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " 18வது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை மார்ச் 19 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11 மணியிலிருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை மார்ச் 20 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். மேலும், பாராளுமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.15ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மார்ச் 21 வியாழக்கிழமை அன்று காலை 10 மணியளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும்" என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்து

திமுக வேட்பாளர் பட்டியல் எப்படி இருக்கும்? : ஸ்டாலின் பதில்!

எலக்‌ஷன் ஃபிளாஷ்: ஒரு நாளைக்கு இரு தொகுதிகள்- ஸ்டாலின் பிரச்சாரத் திட்டம் இதுதான்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam