Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தூங்கு மூஞ்சி க்யூட்டி. ஜிவி இசையில் "டியர்" படத்தின் புது பாடல் ரிலீஸ்!

தூங்கு மூஞ்சி க்யூட்டி. ஜிவி இசையில் "டியர்" படத்தின் புது பாடல் ரிலீஸ்!

Minnambalam 2 years ago

டிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ரெபெல், கள்வன் ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

இந்த படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் டியர் என்ற படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை ஆனந்த ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் "செத்தும் ஆயிரம் பொன்" என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், இளவரசி, ரோகிணி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

டியர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தூங்கும் போது குறட்டை விடும் பழக்கம் இருப்பதால், ஜிவி பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இறுதியில் இந்த பிரச்சனைகளை ஹீரோவும் ஹீரோயினும் எப்படி சரி செய்தார்கள் என்பதே படத்தின் ஒன்லைன்.

முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக உருவாகியுள்ள டியர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "தலவலி" சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதனை தொடர்ந்து செகண்ட் சிங்கிள் பாடலான "மஜா வெட்டிங்" (Maja Wedding) வீடியோ வெளியானது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த பாடலான "Sleeping Beauty" இன்று (ஏப்ரல் 9) வெளியாகி இருக்கிறது. அறிவு இந்த பாடலுக்கு வரிகள் எழுத, சந்தோஷ் ஹரிஹரன் பாடியிருக்கிறார்.

"Sleeping Beauty, தூங்கு மூஞ்சி Cutie.. வம்பான பொண்டாட்டி" என எளிமையான பாடல் வரிகளை கொண்ட ஒரு க்யூட்டான மெலோடியாக இந்த பாடல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- கார்த்திக் ராஜா

இஸ்ரேல் - ஹமாஸ்: போர் நிறுத்தத்துக்கு எகிப்தின் புதிய திட்டம்!

துபாய் டூ சென்னை: மக்களவை தேர்தலுக்காக ரூ.200 கோடி ஹவாலா பணம்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam