Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உச்சம் தொட்ட தங்கம். இதுக்கு ஒரு எண்டு கெடையாதா?

உச்சம் தொட்ட தங்கம். இதுக்கு ஒரு எண்டு கெடையாதா?

Minnambalam 2 years ago

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (மார்ச் 8) ஒரு சவரனுக்கு ரூபாய் 120 அதிகரித்து ரூபாய் 48,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூபாய் 15 அதிகரித்து ரூ.6,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 128 அதிகரித்து ரூ.53,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 16 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 50 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 79-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 79,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களிலேயே தங்கத்தின் விலை ஒரேயடியாக உயர்ந்து ரூபாய் 49,000-த்தை தொட்டுள்ளது . வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 5௦ பைசா விலை அதிகரித்துள்ளது.

இதனை வைத்து பார்க்கும்போது வெள்ளி வாங்குபவர்களுக்கு பெரிதாக பிரச்சினை இல்லை. ஆனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் இந்த நேரத்தில் அதுகுறித்த நினைப்பையே விட்டுவிடும் அளவிற்கு, விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam