ரஷ்யாவுக்காக போரிட கட்டாயப்படுத்தபடுவதாக போர்களத்தில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் வீடியோ வெளியிட்ட நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று (பிப்ரவரி 23) பதில் அளித்துள்ளது.
Indians stuck as 'dupe' soldiers

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்கிறது. இதுவரை 30,457 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைனில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பு பணி தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போருக்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ராணுவத்தின் சார்பில் போரில் ஈடுபட்டு வரும் இந்தியர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
அதில், "ரஷ்யாவிற்கு தவறான ஏஜெண்ட் மூலம் வேலைக்கு வந்தோம். எங்களுக்கு நல்ல சம்பளத்தில் பாதுகாப்பு அதிகாரி வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் ரஷ்யா வந்தபிறகு அந்த மொழியில் அச்சிடப்பட்ட ஒப்பந்தங்களில் எங்களிடம் கையெழுத்து வாங்கினர்.
பின்னர் எங்களுக்கு ராணுவ பயிற்சி அளித்து உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளுடன் இணைந்து போரிட வலுக்கட்டாயமாக தள்ளினர்.
எங்களது உயிர் இப்போது ஆபத்தில் உள்ளது. இந்திய அரசு தான் எங்களை காப்பாற்ற வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஒரு சில இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தில் ஆதரவு வேலைகளில் சேர்ந்துள்ளனர். மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் இந்த விஷயத்தை தொடர்புடைய ரஷ்ய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரஷ்யா-உக்ரைன் மோதலில் இருந்து விலகி இருக்குமாறு அனைத்து இந்திய நாட்டவர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரஷ்ய இராணுவம் 200 நேபாள இளைஞர்களை உக்ரைனுடனான மோதலில் ஈடுபடுத்தியதாகவும், அதில் 6 நேபாள குடிமக்கள் கொல்லப்பட்டதாகவும் நேபாள வெளியுறவு அமைச்சகம் கடந்த டிசம்பரில் ஒப்புக்கொண்டது.
இதனையடுத்து நேபாள குடிமக்களை ரஷ்ய ராணுவத்தில் சேர்க்க வேண்டாம் என்றும், தற்போது பணியில் உள்ளவர்களை திருப்பி அனுப்புமாறும் நேபாள அரசு ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
"நல்ல சாய்ஸ்" : தளபதி 69 படத்தை இயக்கப்போவது இவரா?
டாடா… பைபை…. நாளை பாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி
Indians stuck as 'dupe' soldiers

