Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி: காங்கிரஸ் அறிவிப்பு

உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி: காங்கிரஸ் அறிவிப்பு

Minnambalam 2 weeks ago

மிழகத்தில் அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

விஜய்க்கு ஆதரவு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்தச் சூழலில், தவெக ஆட்சி அமைக்கத் தங்களின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வழங்குவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

வருங்காலக் கூட்டணி:

நிபந்தனைகளுடன் கூடிய இந்த ஆதரவை அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தவெக-வுடன் கூட்டணி தொடரும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam