Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகமா? தெரிந்து கொள்வது எப்படி?

உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகமா? தெரிந்து கொள்வது எப்படி?

Minnambalam 2 years ago

வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை விவரத்தை தேர்தல் ஆணையத்தின் இணையதள மூலம் தெரிந்துகொள்ளலாம்.

முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வெயில் காலம் என்பதால் வாக்காளர்கள் பெரும்பாலும், காலை நேரத்தில் வாக்களிக்க வந்துவிடுவார்கள். வேலைக்குச் செல்பவர்களும் காலையிலேயே வந்து வாக்களித்துவிட்டு சென்று விடுவார்கள்.

அதுபோன்று மாலையில் 3 மணிக்கு பிறகு வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்பதால், அந்த சமயத்தில் வாக்குச்சாவடிக்கு அதிகம் பேர் வருவார்கள்.

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் நிற்பதை தவிர்க்க வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் ஆணையம் புதிய வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அதன்படி வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை https://erolls.tn.gov.in/queue/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த லிங்க்கில் மாவட்டத்தின் பெயர், தொகுதியின் பெயர் மற்றும் வாக்குச்சாவடியின் விவரத்தை உள்ளிட்டால் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை குறித்த விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

பிரியா

தொடங்கிய வாக்குப்பதிவு : வாக்காளர்களிடம் மோடி வேண்டுகோள்!

முதல் ஆளாக வாக்களித்தார் அஜித்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam