Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வடசென்னையில் காற்று மாசுபாடு வாரியம் அமைக்கப்படும் : கலாநிதி வீராசாமி வாக்குறுதி!

வடசென்னையில் காற்று மாசுபாடு வாரியம் அமைக்கப்படும் : கலாநிதி வீராசாமி வாக்குறுதி!

Minnambalam 2 years ago

டசென்னையில் காற்று மாசுபாடு வாரியம் அமைக்கப்படும் என்று வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளராக கலாநிதி வீராசாமி மீண்டும் போட்டியிடுகிறார். இதனையடுத்து தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று காலை திருவொற்றியூர் மத்திய பகுதி சார்பில் மணலி பாடசாலை தெரு, திருவொற்றியூர் மேற்கு பகுதி சார்பில் பெரியார் நகர் ஆகிய 2 இடங்களில் திமுக தேர்தல் பணிமனையை அவர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து திருவொற்றியூர் மேற்கு பகுதியில் அஜாக்ஸ் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு திறந்த ஜீப்பில் கலாநிதி வீராசாமி பிரச்சாரத்தை தொடங்கினார்.

அன்சா அப்பார்ட்மென்ட், மாணிக்கம் நகர், எர்ணாவூர், கே.வி.கே.குப்பம், சுனாமி குடியிருப்பு, ராம கிருஷ்ணாநகர், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் வீதிவீதியாக சென்று கலாநிதி வீராசாமி எம்பி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குசேகரித்தார்.

காற்று மாசுபாடு வாரியம்!

அப்போது அவர் பேசுகையில், ''எண்ணூர் பறக்கும் சாலை, விம்கோ நகரில் இருந்து எண்ணூர் மற்றும் மணலி வழியாக மாதவரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான 12,000 கோடி ரூபாயை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை என்றாலும் தமிழக அரசின் கஜானாவில் இருந்து நிச்சயமாக செயல்படுத்தப்படும்.

மேலும் வடசென்னையில் காற்று மாசுபாடு வாரியம், ஐடி வேலைவாய்ப்பு தளம், எண்ணூர் விரைவு சாலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

SRHvsGT : மொஹித் பவுலிங்கில் சுருண்ட ஹைதராபாத்… ஈஸியாக வென்ற குஜராத்!

அதிமுக இருக்காதா? : பாஜக நிர்வாகிக்கு எடப்பாடி ஆவேச பதிலடி!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam