Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'வாட்ஸ் அப்பில் கூட பிரச்சாரம் கூடாது' : தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் என்ன?

'வாட்ஸ் அப்பில் கூட பிரச்சாரம் கூடாது' : தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் என்ன?

Minnambalam 2 years ago

மிழ்நாட்டில் 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக களைகட்டிய தேர்தல் பிரச்சாரம் இன்று (ஏப்ரல் 17) நிறைவடைந்தது.

இதனிடையே பிரச்சாரம் ஓய்வடைந்த பிறகு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.

அதன்படி,

எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்றவற்றின் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது.

குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது.

இந்த விதிமுறைகள் மீறப்பட்டால் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் ஆகியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் ஏப்ரம் 17 அன்று மாலை 6 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என கண்டறியப்படும்.

வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் செயல் திறனற்றதாகிவிடும்.

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது.

இது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.

இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரச்சார அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர்கள் தொலைவுக்கு வெளியே அமைக்கப்படலாம்.

தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

2024 டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் யார்?

வாக்களிக்கும் உரிமையையும், பொறுப்பையும் கையிலெடுங்கள் : சத்குரு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam