Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வேளச்சேரி- தாம்பரம்: மெட்ரோ ரயில் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

வேளச்சேரி- தாம்பரம்: மெட்ரோ ரயில் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

Minnambalam 2 years ago

Tambaram to Velachery Metro Rail

சென்னையை பொறுத்தவரை மக்கள் அதிகளவு மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

குறைந்த நேரம், குளிர்சாதன வசதி ஆகிய காரணங்களால் நாளுக்குநாள் மெட்ரோவில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சென்னையில்தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீதொலைவுக்குமெட்ரோரயில்கள்இயக்கப்படுகின்றன. இதையடுத்து, 2-ம்கட்டமெட்ரோரயில்திட்டம் 116.1 கி.மீதொலைவில் 3 வழித்தடங்களில்செயல்படுத்தப்படுகிறது.

அடுத்தகட்டமாக, முக்கியஇணைப்புப்பகுதியாகஇருக்கும்வேளச்சேரி- தாம்பரம்இடையேமெட்ரோரயில்திட்டத்தைச்செயல்படுத்தவேண்டும்என்றுபயணிகள்நீண்டகாலமாகவலியுறுத்திவருகின்றனர்.

இந்தவழித்தடத்தில்லைட்மெட்ரோரயில்திட்டம்செயல்படுத்த, கடந்த 2019-ம்ஆண்டுமுடிவுசெய்து, சாத்தியக்கூறுஅறிக்கையும்தயாரிக்கப்பட்டு, தமிழகஅரசிடம்வழங்கப்பட்டது.

ஆனால், சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இதற்கு தயக்கம் காட்டியது.

இந்நிலையில், தாம்பரம்-வேளச்சேரி மற்றும் வேளச்சேரி-கிண்டி இடையே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது குறித்து மீண்டும் சாத்தியக்கூறு ஆய்வு நடத்த, சிஸ்ட்ரா எம்.வி.ஏ. கன்சல்டிங் இந்தியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள், "கூடுதல் வழித்தடங்களை இணைக்கும் போதுதான், பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். இந்த நோக்கத்திலேயே புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் 1 திட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

தாம்பரம் - வேளச்சேரி மற்றும் வேளச்சேரி - கிண்டி இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, அங்குள்ள பிரதான சாலையை ஒட்டியே, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

அடுத்த 3 மாதங்களில்இந்தப்பணிமுடிந்தவுடன், இந்தசாத்தியக்கூறுஅறிக்கைக்குதமிழகஅரசுஒப்புதல்அளித்தால்மட்டுமேவிரிவானதிட்டஅறிக்கைதயாரிக்கும்பணியும்மேற்கொள்ளப்படும்", என தெரிவித்து உள்ளனர்.

மேற்கண்ட இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

எனவே பயணிகளின் இந்த கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்குமா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-மாணவநிருபர்கவின்

பாமகவுடன் அதிமுக மறைமுக பேச்சுவார்த்தையா?: எடப்பாடி பழனிசாமி பதில்!

நடிகர் அஜித்குமார் எப்படி இருக்கிறார்? : வெளியான புதிய தகவல்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam