Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வெற்றிமாறனுடன் இணையும் லாரன்ஸ். தரமான சம்பவம் லோடிங்.!

வெற்றிமாறனுடன் இணையும் லாரன்ஸ். தரமான சம்பவம் லோடிங்.!

Minnambalam 2 years ago

கோலிவுட்டில் பிஸியான ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். நான்கு பெரிய படங்களை கையில் வைத்திருக்கும் அவர்தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக்.

2001 ஆம் ஆண்டு 'பார்த்தாலே பரவசம்: என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடிகராகவும், நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

மேலும் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். கடைசியாக ராகவா லாரன்ஸ் நடித்த திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.

இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் போன்ற பலர் நடித்திருந்தனர்.

வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருக்கிறது.

அடுத்ததாக அவர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 'பென்ஸ்' திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது 25-வது படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஹண்டர்' என பெயர் வைத்துள்ளனர்.

அடுத்ததாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் திரைப்படத்துக்கு 'அதிகாரம்' என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்கு வெற்றிமாறன் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

துரை செந்தில் குமார் இயக்க இருக்கிறார். இந்த திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்து பின் நிறுத்தப்பட்டது.

இதனை மீண்டும் துவங்கி இருக்கின்றனர். இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

-பிரியங்கா

'புஷ்பா 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்?

#13YearsOfKO: சிம்புவின் காஸ்ட்லி மிஸ்… 'என்னமோ ஏதோ'ன்னு 13 வருஷம் ஓடிப்போச்சு!

RCB vs KKR: சேர்க்கை தான் சரியில்ல… மீம்ஸ் போட்டு ஆறுதல் தேடும் ரசிகர்கள்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam