ஓ மை கடவுளே என்ற பேண்டஸி லவ் ஸ்டோரி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.
படம் மிகப்பெரிய வெற்றியடைய இதன் தெலுங்கு ரீமேக்கான ஒரி தேவுடா (Ori Devuda) படத்தையும் அஸ்வத் மாரிமுத்தே இயக்கினார்.
இந்தநிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜயின் GOAT படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 26-வது படத்தை தான் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
இதில் ஹீரோவாக இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஏப்ரல் 10) ஏஜிஎஸ் 26 படம் குறித்து வெளியான அறிவிப்பு வீடியோவில், பிரதீப் ரங்கநாதன் தான் படிக்கும் காலகட்டத்தில் கல்லூரியில் எந்த அளவிற்கு சேட்டைகள் செய்தேன்.

எப்படி சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது, கல்லூரி காலத்தில் தனது சீனியரின் குறும்படத்தில் நடித்த அனுபவம் என பல விஷயங்களை பேசிக்கொண்டே, அந்த கல்லூரி முழுவதும் சுற்றி வருவார்.
மேலும் தற்போது அந்த சீனியரும் நானும் இணைந்து ஒரு புதிய படத்தை எடுக்கப் போகிறோம்.
கல்லூரியில் சீனியரின் குறும்படத்தில் தான் நடித்த அந்த காட்சியை மீண்டும் ரீ கிரியேட் செய்து இந்த அறிவிப்பு வீடியோவை வெளியிட விரும்புகிறேன் என்று, கூறிவிட்டு ஸ்டைலாக பிரதீப் ரங்கநாதன் நிற்கிறார்.
தற்போது உள்ள பிரதீப் ரங்கநாதன் புகைப்படமும் அப்போது அவர் கல்லூரி காலகட்டத்தில் அதேபோல் போஸ் கொடுத்த புகைப்படமும், ஒன்றாக திரையில் தோன்றி நாஸ்டால்ஜியா மொமண்டை உருவாக்கும் விதமாக இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

