Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய் மே 9-ந் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார்

விஜய் மே 9-ந் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார்

Minnambalam 2 weeks ago

மிழகத்தின் புதிய முதல்வராக மே 9-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக் 108 இடங்களில் வென்றுள்ளது தவெக. இதனையடுத்து ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்.

ஆனால், பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்களின் பட்டியலை விஜய் தர வேண்டும் என ஆளுநர் அர்லேகர் கேட்டது பெரும் சர்ச்சையானது. இதனால் விஜய் இன்று பதவியேற்க திட்டமிட்டிருந்தது ரத்து செய்யப்பட்டது.

தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதுதான் மரபு என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் இன்று மீண்டும் ஆளுநர் அர்லேகரை விஜய் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, "தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும்; 2 வாரங்களில் சட்டசபையில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கிறோம்" என ஆளுநர் அர்லேகரிடம் விஜய் தெரிவித்தார். ஆனால் ஆளுநரோ, "குறுகிய காலத்தில்" பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து வரும் 9-ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தமிழ்நாட்டின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam