Dailyhunt
விஜய்க்கு போன் செய்த ராகுல்

விஜய்க்கு போன் செய்த ராகுல்

Minnambalam 2 weeks ago

விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் ராகுல் காந்தியும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், "நான் விஜய்யிடம் பேசி, தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த மகத்தான வெற்றிக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்த மக்கள் தீர்ப்பு, எழுச்சி பெற்று வரும் இளைஞர்களின் குரலைப் பிரதிபலிக்கிறது. இதை யாராலும் புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கப்படவும் மாட்டாது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் கடின உழைப்பிற்கும், ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களின் நலனைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்குச் சேவை செய்வதிலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து உறுதியுடன் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam