Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விக்ரம் பிரபு படத்தில் அமலா ஷாஜி

விக்ரம் பிரபு படத்தில் அமலா ஷாஜி

Minnambalam 3 weeks ago

ன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர் அமலா ஷாஜி.

இவருக்கு 4.2 மில்லியன் பாலோயர்ஸ்கள் உள்ளனர். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

விக்ரம் பிரபுவின் 26 ஆவது படம் எடுக்கப்பட்டு வருகிறது. புது இயக்குனர் சித்தார்த்த இயக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தில் ஹீரோயினாக சிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அமலா ஷாஜி நடிக்க உள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், "ஒரு காலத்தில் நான் கனவு கண்டது இன்று நிஜமாகிறது. என்னுடைய முதல் படம். வாழ்நாள் முழுமைக்குமான சந்தோஷம்.

இந்த அழகான படைப்பில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சியும், உற்சாகமும், மிகுந்த நன்றியுணர்வும் கொள்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கி, இந்தத் தொடக்கத்தை மிகவும் சிறப்புமிக்கதாக மாற்றிய எங்கள் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

என்னை ஊக்குவித்த குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam