Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
யாஷ்ஷின் 'டாக்ஸிக்' : டிரெய்லர் எப்படி?

யாஷ்ஷின் 'டாக்ஸிக்' : டிரெய்லர் எப்படி?

Minnambalam 2 weeks ago

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பின் நடிகர் யாஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள டாக்ஸிக் (Toxic) திரைப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு பெங்களூரில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

இத்திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி உள்ளார்.

கோவாவில் போதைப் பொருள் கடத்தல்- மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட படம் இது.

கேங்ஸ்டர் திரைப்படமான இப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 26-ந் தேதி திரைக்கு வரும் டாக்ஸிக் படத்தின் டிரெய்லர் இன்று பெங்களூருவில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் அதே சமயத்தில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

படத்தில் அதிகமான வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. யாஷ் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் மிரட்டியுள்ளார். ஆனால் குழந்தைகளுடன், குடும்பத்துடன் சென்று பார்க்க முடியுமா என்ற கேள்வியையும் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் எழுப்புகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam