Friday, 18 Oct, 5.06 pm Muhurat by Kalyan Jewellers

பந்தம்
உங்கள் ப்ரி-வெட்டிங் ஷூட்டுடன் தங்க ஜூவல்லரியை எவ்வாறு இணைக்கலாம்

தங்கம் இல்லாமல் எந்த இந்திய திருமணமும் முழுமையடைவதில்லை என்பதே மிக உண்மையானது! இந்தியாவில், மணமகன் குடும்பமாக இருந்தாலும் சரி, மணமகள் குடும்பமாக இருந்தாலும் சரி, அவர்களைப் பொறுத்த வரையில், திருமணத்திற்கு நிகராக தங்கம் மதிக்கப்படுகிறது. தங்கத்துடன் தொடர்புடைய பெருமையும், புகழும் அனைத்து சமூக வர்க்கத்திலும் கண்கூடாக பார்க்க முடிகிறது. திருமணம் என்று வரும் போது, தங்கம் என்பது மங்களகரமான ஓர் பொருளாக மட்டுமின்றி, புதுமணத் தம்பதிகள் அவர்களுக்கென ஓர் நிதி ஆதாரத்தை கொண்டுள்ள பாதுகாப்பு உணர்வையும் அளிக்கக் கூடியது.

எனவே, திருமணத்தின் முக்கிய நிகழ்வின் போது மட்டுமின்றி, திருமணத்திற்கு முந்தைய சடங்குகளான மெகந்தி, சங்கீத் அல்லது மணமக்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் தங்கத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. அனைத்தையும் விட, தங்கள் அன்பானவருடன் ப்ரி-வெட்டிங் போட்டோ ஷூட்டை எடுத்துக் கொள்ள விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்.

அழகான லொகேஷனை தேர்ந்தெடுங்கள்

அழகான லொகேஷன், கச்சிதமான பேக்டிராப் மற்றும் போட்டோகிராபர் ஆகியவை சரியாக அமைவது, கேமரா முன்பாக உங்களுக்கு ஓர் சுகமான அனுபவத்தை அளிக்கும். உங்கள் பார்ட்னரின் கரங்களை நீங்கள் பற்றிக் கொண்டு கனவுலகில் மிதக்கும் சமயத்தில், உங்களை சுயநினைவிற்கு கொண்டு வர நாங்கள் விரும்பவில்லை.

கடற்கரையில், நேர்த்தியான, உன்னதமான வெள்ளை நிற பின்புலத்தை நீங்கள் காட்சிப்படுத்தினால், கிளாசிக் சாலிடர் வடிவங்களான இதயம், ஓவல், ரவுண்ட், மார்க்யூஸ், பியர் மற்றும் குஷன் செட் ஆகியவை கொண்ட தங்க நகைகளை தேர்ந்தெடுங்கள். பாரம்பரிய லொகேஷனான, நிலா, நட்சத்திர வெளிச்சத்தில் நீங்கள் புகைப்படத்திற்கு போஸ் தருவதாக இருந்தால், உங்கள் தங்க நகையில் வண்ணமயமான விலைமதிப்பற்ற எமரால்ட், ரூபி கற்களை கொண்டு அலங்கரிக்கலாம்.

அல்லது, நீங்கள் ரொம்பவே ரொமான்டிக் பிக்னிக் டேட் கபிளாக இருந்தால், வழக்கத்துக்கு மாறான பிரத்யேகமான வடிவங்களில் தங்க நகைகளை தேர்ந்தெடுத்து அதில் மின்னும் சிறிய கற்களை பதிக்கலாம். இது உங்கள் காதல் கதையைப் போல, நவநாகரீகமாகவும், இன்னும் தனித்துவமாகவும் தோற்றமளிப்பதற்கான யோசனையாகும்.

தங்கத்தின் பன்முகத்தன்மை

தங்கத்தின் பன்முகத்தன்மையானது, பல வழிகளை கொண்டிருக்கிறது. அது, இடம், நாள் பகுதி, ஆடைகள் மற்றும் மனநிலைக்கு ஏற்ப கலந்து பொருந்தக் கூடியது. அப்படிப்பட்ட நுட்பமான நுணுக்கங்கள், சரியான ஃபினிஷங் கொண்ட நகை ரகங்களை கல்யாண் ஜூவல்லர்ஸில் நீங்கள் காணலாம். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலிருந்தும் தனித்துவமான வடிவங்களை உருவாக்கும் கைவினைஞர்களே அவர்களின் பலம். எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நகை வடிவமைப்புகளின் மையமாக அமைகிறது.

இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும்? கல்யாண் ஜூவல்லர்ஸ் உலகத்திற்கு வருகை தந்து, உங்களுக்கு பொருத்தமான நகையை தேர்ந்தெடுத்து, ப்ரி-வெட்டிங் ஷூட்டுக்கான உங்களின் நுட்பமான காதல் பரிசாக அளித்திடுங்கள்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Muhurat by Kalyan Jeweller Tamil
Top