Saturday, 19 Oct, 3.54 pm Muhurat by Kalyan Jewellers

பந்தம்
உறவில் நல்லொழுக்கங்களின் பங்கு

உறவுகளை மகிழ்ச்சிகரமாக மற்றும் ஆரோக்கியமாக வழிநடத்துவதற்கு, எந்த ஒரு மேஜிக் ஃபார்முலாவும் இல்லை. ஆனால் நல்ல, நீண்டகால துணைகளை உருவாக்கும் நபர்களிடம் சில நல்லொழுக்கப் பண்புகள் காணப்படுகின்றன. எனவே உங்களுக்கும், உங்கள் துணைக்கும் வெற்றிகரமான ஓர் உறவுமுறைக்காக இத்தகைய நற்பண்புகள் அவசியமா? என்பதை இப்போது பார்ப்போம்.

1. பயனுள்ள பேச்சுவார்த்தை

கேட்பது, சண்டையிடாமல் வாதிடுவது, தன்னை வெளிப்படுத்துவது போன்ற கலைகள் அவசியமானவை. உங்கள் உறவில் ஏதேனும் பிரச்னை இருந்தால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுங்கள். பேசுவதன் மூலம் எந்த சவாலையும் சமாளிக்கலாம். ஒருவருக்கொருவர் வாதிடுவதும் ஆரோக்கியமானதாகும். ஆனால் அதை சரியான வழியில் செய்திட வேண்டும். ஒருவருக்கொருவர் புண்படுத்திக் கொள்ளாமல் சரியான முறையில் வாதிடுவது, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள உதவும். காது கொடுத்து கேட்பதன் மூலம் உங்கள் துணை கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அவர் என்ன நினைக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

2. பொறுமை

நாம் அனைவரும் தனித்துவமான பண்புகள், மதிப்புகள், பலம் மற்றும் பலவீனங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளோம். அனைவரும் வாழ்க்கையில் தனக்கென ஓர் பாதையை கொண்டிருக்கிறார்கள். நமது அனுபவங்களே நாம் யார் என்பதை வடிவமைக்கின்றன. எனவே ஓர் உறவில் ஒருவருக்கொருவர் பொறுமை காத்தல் மிகவும் முக்கியமானதாகும். உங்கள் துணையின் அகம், புறம் இரண்டையும் அறிந்து கொள்வதன் மூலம், அவர்களின் பலத்தையும் குறைபாடுகளையும் புரிந்து கொண்டு, அவர்களிடம் பேசும்போது மிகுந்த பொறுமையுடன் இருக்க முடியும்.

3. மன்னித்தல்

ஓர் ஆரோக்கியமான உறவில் மன்னிக்கும் பண்பு முக்கிய அங்கமாகும். ஏனெனில், எல்லோருமே முழுமையான ஒரு மனிதராக இருப்பதில்லை. மன்னித்தல் என்பது நீங்கள் உங்கள் துணையை காயப்படுத்தாமல், உங்கள் மனம் கசப்புணர்வை சுமந்து கொண்டிருக்காது என்பதாகும். மன்னிக்கும் பண்பை கடைபிடிக்கும் தம்பதிகள், ஆரோக்கியமான மற்றும் மிக நீடித்த அன்பான உறவை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.

4. ஏற்றுக் கொள்ளுதல்

மன்னித்தலும், ஏற்றுக் கொள்ளுதலும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. ஏற்றுக் கொள்ளும் நற்பண்பு என்பது உங்கள் துணையின் எண்ணங்களுடன் நீங்கள் துளியும் ஒத்துப்போகாவிட்டாலும் அவர்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதே ஆகும்.

5. மரியாதை மற்றும் மதித்தல்

ஓர் உறவில் மிக முக்கியமான நற்பண்புகளில் ஒன்று, ஒருவருக்கொருவர் மரியாதை அளித்தலும், மதித்தலும் ஆகும். உங்கள் துணையை நீங்கள் நடத்தும் விதத்திலும், அவர்களுடன் பேசும் விதத்திலும், அவர்களைப் பற்றி பிறரிடம் கூறும் விதத்திலும் நீங்கள் அவர்களை எப்படி மதிக்கிறீர்கள் என்பது வெளிப்படுகிறது. உங்களிடம் பொய் சொல்லாத மற்றும் உங்கள் கருத்துக்கு எப்போதும் மதிப்பளிக்கும் துணை மிகவும் மதிக்கப்பட வேண்டியவர் ஆவார்.

இவை, உறவு ஆரோக்கியமாக இருக்க நீங்களும், உங்கள் துணையும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய சில நற்பண்புகள் ஆகும். ஆரோக்கியமான & மகிழ்ச்சியான உறவுகள் இப்போதும், எப்போதும் மதிக்கப்படுவதற்கான தகுதி படைத்தவை. வாழ்க்கையின் சில தருணங்களை மறக்க முடியாததாக மாற்றுவது மிக முக்கியம். அத்தகைய தருணங்களை நீங்கள் கொண்டாட, கல்யாண் ஜூவல்லரியின் நேர்த்தியான கலெக்ஷன்கள் உங்களுக்கு உதவும். மினுமினுக்கும் தங்கத்துடன் உங்கள் அன்பை போற்றிப் பாதுகாத்திடுங்கள். ஏனெனில், அரிதானவைகள் எப்போதும் பிரகாசமாக ஜொலிக்கக் கூடியவை.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Muhurat by Kalyan Jeweller Tamil
Top