Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
13 வயது சிறுமிக்கு ரூம் தந்த லாட்ஜ்; கர்நாடகா போலீஸ் விசாரணை - ஆ*பாச நகராக மாறுகிறதா திருவண்ணாமலை?

13 வயது சிறுமிக்கு ரூம் தந்த லாட்ஜ்; கர்நாடகா போலீஸ் விசாரணை - ஆ*பாச நகராக மாறுகிறதா திருவண்ணாமலை?

ர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த போலீசார், இரண்டு கார்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகில் உள்ள சிவா ரெசிடென்சி என்கிற லாட்ஜில் செப்டம்பர் 2ஆம் தேதி இரவு திடீரென ஆய்வு செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுக்குறித்து நாம் விசாரித்த போது, திருப்பூரை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார். இது தெரிந்த அந்த குடும்பத்தார் அச்சிறுமியை கர்நாடகா மாநிலம் மைசூருக்கு அனுப்பியுள்ளனர். இந்த இளைஞன் அங்கு சென்று அந்த சிறுமியை, அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்திலேயே திருப்பூர், சேலம், திருவண்ணாமலை என அங்கங்கு ரூம் எடுத்து தங்கி உள்ளனர். பின்பு கர்நாடகா போலீசார் இவர்களை கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

அந்த 13 வயது சிறுமி, நீதிபதியிடம் தந்த வாக்குமூலத்தில், தாங்கள் எங்கெங்கே தங்கினார்கள் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் கர்நாடகா போலீசார் அவர்கள் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளபடி எங்கு தங்கினார்களோ அங்கு நேரில் சென்று ஆதாரங்களை சேகரிக்கின்றனர். இதற்காகவே திருவண்ணாமலை வருகை தந்துள்ளனர். அதில், 13 வயது சிறுமியிடம் எந்த ஆவணங்களும் வாங்காமல் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பிரபலமான சிவா லாட்ஜில் ரூம் தந்துள்ளார்கள். இது கர்நாடகா போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுக்குறித்து அந்த லாட்ஜ் உரிமையாளரான சிவஞானத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரோ தனது மேலாளரை கைகாட்டி உள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தி ஆவணங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டு சில ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டு இரவு 12 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

ஆன்மீக நகர் திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். சமீப காலங்களாக இளைஞர்கள் அதிக அளவு வருகின்றனர். இங்கு தங்குபவர்கள் ஆன்மிகத்துக்காக வருகிறார்களா? ஆபாசமாக நடந்து கொள்கிறார்களா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது இச்சம்பவம். அதே நேரத்தில் லாட்ஜ்களிலும், ரெசிடென்சிகளிலும் ஆவணங்களே இல்லாமல் எப்படி வருபவர்களுக்கு எல்லாம் விதிகளை மீறி அறைகளை தருகிறார்கள் ? பணம் தந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்களா என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran