சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் செய்தியாளர்கள் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநரைச் சந்தித்து புகார் வைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், 'ஆளுநரும் அவர்களுடன் கூட்டணி பேசிக் கொண்டிருக்கிறாரா? ஆளுநர் கூட்டணி பேசிக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை, வரிசையாக கூட்டணிக் கட்சிகளைப் பார்ப்பதற்காக தான் மற்ற கட்சிகள் போவார்கள். இந்த கேள்வியை அவரிடம் கேட்க வேண்டும். ஆளுநர் கூட்டணி பேசுகின்ற வேளையை ஆரம்பித்துவிட்டாரா என்பதை. குதிரை பேரம் என்பதற்கு என்ன மீனிங் என்பதை கூகுளில் தேடிப் பார்க்கட்டும். குதிரை பேரம் என்ன என்று கேட்டால் 234 பேரில் யாராவது ஒரு நபருக்கு பணம் கொடுப்பதற்கான சாட்சி இருந்தால் அதன் பெயர்தான் குதிரை பேரம்.
234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருத்தராவது முன்வந்து காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும். அப்படி யாராவது கொடுத்திருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். அதனால் என்னை பொருத்தமட்டில் வினோதமாக இருக்கிறது. இந்த செய்தி விபரீதமாகி விடக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்தாக இருக்கிறது'' என்றார்.

