Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆன்லைன் செயலி மூலம் மோசடி : 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார்!

ஆன்லைன் செயலி மூலம் மோசடி : 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார்!

துரை மாவட்டம் மேலூர் பகுதிகளில், ஆன்லைன் செயலி மூலம் பணத்தை முதலீடு செய்தால், அந்தப் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் எனக் கூறி, தொடர்ந்து பொதுமக்கள் சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இணைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்த செயலி முடங்கியுள்ளது. இதனால், செலுத்தப்பட்ட பணத்தைப் பெற முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இது தொடர்பாகப் புகார் அளிக்கலாம் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மேலூர் பகுதியில் நேற்று (28.08.2026) முதல் பொதுமக்கள் புகார் மனுக்களை அளிக்கத் தொடங்கினர். அதோடு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் தான் புகார் பெறுவதற்காக இரண்டாவது நாளாக இன்று (29.08.2026) மேலூர் பகுதிகளில் மூன்று இடங்களில் காவல்துறை சார்பில் இதற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த முகாமில், மேலூர் டிஎஸ்பி சிவகுமார் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களைப் பெற்று வருகின்றனர்.

அதே சமயம் தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் பாதிக்கப்பட்டவர்கள் வைத்து வருகின்றனர். நேற்று, இன்று என இரண்டு நாட்களிலும், சுமார் 9,000-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் காவல்துறைக்குக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் இந்த முகாமிற்கு வந்து, தங்களது பணத்தை மீட்டுத் தரக் கோரி புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran