Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அடிக்கடி டார்ச்சர் செய்த கணவன்- ஊரையே நடுங்க வந்த மனைவியின் செயல்

அடிக்கடி டார்ச்சர் செய்த கணவன்- ஊரையே நடுங்க வந்த மனைவியின் செயல்

விருதுநகரில் அடிக்கடி சந்தேகப்பட்டு சச்சரவில் ஈடுபட்டு வந்த கணவனை மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணி-திவ்யபாரதி தம்பதி. இவர்களுக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை சச்சரவு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக திவ்யபாரதி நடத்தை மீது கணர் மணிக்கு சந்தேகம் ஏற்பட்டு அது தொடர்பாக பலமுறை அவரிடம் சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இதேபோன்று மீண்டும் சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த திவ்யபாரதி மணியை கீழே தள்ளிவிட்டு கத்தியை எடுத்து பல இடங்களால் குத்திக் கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் மணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் மனைவி திவ்யபாரதியை கைது செய்துள்ளனர். மனைவியே கணவனை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran