Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்" - டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி!

"ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்" - டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி!

ரபரப்பான அரசியல் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (01.09.2026) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 'தமிழ்நாட்டைப் பிடித்த சாபக்கேடாக இந்த ஆட்சி இருக்கிறது. இவர்களுக்கு வாக்களித்தவர்கள், உறுதியாக உணரத் தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் எனக்கு வருகின்ற செய்தி. உறுதியாக இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவார்கள். இந்த மாயை ஒரு முடிவுக்கு வரும்.

தமிழில்கூட ஒழுங்காகப் பேசத் தெரியாதவர்களை என்ன சொல்வீர்கள்? ஒழுங்காக ஒரு கணக்கு, மூன்றாம் வகுப்பு பையன் படிக்க வேண்டிய விஷயங்களைக்கூட படிக்கத் தெரியாதவர்கள். அதற்கு வேறு என்ன குறி என்று சொல்வது? ஆச்சரியக்குறி என்று சொல்லச் சொல்கிறீர்களா?. ஒரு செயற்கையான சூழலை உருவாக்கி, இயற்கைக்கு எதிராக வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். நான் அப்போதுதான் சொல்கிறேன், 108 சட்டமன்ற உறுப்பினர்களை உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

அது திமுகவா, அதிமுகவா? 60 ஆண்டுகளாக ஆட்சி செய்தார்களே ஒரு மாற்றத்துக்காக இன்னொரு கடையில் சாப்பிடுவது மாதிரிதான் அது. ஆனால், அங்கு போய் சாப்பிட்டால் டயரியா வரும் என்ற அளவுக்கு ஆகிவிட்டது. காலரா வரும் அளவுக்கு ஆகிவிட்டதால், இன்றைக்கு மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். வாக்களித்தவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு செயற்கையான சூழலை உருவாக்கி, தமிழ்நாட்டில் இளைஞர்களையும் இளம்பெண்களையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.

இந்தியா முழுவதும் விஜயுடைய ரீல்களைப் பார்க்கிறீர்கள். நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடருக்கு ரூ.25 கோடி கொடுத்தாரா? என்ன? யார்? நிர்மல் குமார்தான் எடுத்துக்கொண்டு போய் கொடுத்தாரா? இதுபோன்ற சூழல்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. காங்கிரஸ் வந்து இவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால், இவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்திருப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அதனால், காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு எப்போதெல்லாம் தீங்கு நடக்கிறதோ, அது நீட் தேர்வாக இருக்கட்டும், காவிரி பிரச்சினையாக இருக்கட்டும், எந்த ஒரு திட்டமாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் காங்கிரஸ்தான் அதற்குக் காரணமாக இருக்கும்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு சாபக்கேடு மாதிரி, 60 ஆண்டுகளாக அவர்களுக்கு ஆட்சி இல்லை என்ற கோபத்தில், நீங்கள் சொல்கிற மாதிரி இந்த மாபெரும் ஆச்சரியக்குறிகளைத் தேர்வு செய்து, அவர்கள் தலையிலேயே கொள்ளிக்கட்டையை எடுத்துக்கொண்டு சொருகிக்கொண்டிருக்கிறார்கள். ராகுல் காந்திக்கு இந்த மாரிக் தாக்குரோ, பிரவீண் காந்தி உறுதியாக பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும். உறுதியாக ஜெயலலிதாவுடைய ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் வரும்.' எனத் தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran