Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

பிரிட்டனின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற சர்வதேச 'மிச்செலின் லீ மான்ஸ் கப்' கார் பந்தயத்தை, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் சி.

ஜோசப் விஜய் பச்சைக் கொடியசைத்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்த சர்வதேசப் போட்டியில் பிரபல நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் தனது சொந்த அணியான 'அஜித் ரெட் ஆண்ட் ரேசிங்' சார்பில் பங்கேற்றார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், லீ மான்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ அழைப்பை ஏற்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொண்டார். பந்தயம் தொடங்குவதற்கு முன்பாக சில்வர்ஸ்டோன் களத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜயை, அஜித் குமார் நெகிழ்ச்சியுடன் கட்டித்தழுவி வரவேற்றதுடன், தனது அழைப்பை ஏற்று வந்ததற்கும், தமிழகத்தில் விளையாட்டுத் துறையையும் மோட்டார் ஸ்போர்ட்ஸையும் மேம்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அதே சமயம் அஜித்தை ஆரத்தழுவிய முதலமைச்சர் விஜய் முத்தம் கொடுத்து வாழ்த்தினார். இப்போட்டியில் இந்தியாவின் நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோரும் பங்கேற்றுள்ள நிலையில், அவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். லண்டனில் அரங்கேறிய "தல - தளபதி" சந்திப்பு மற்றும் பந்தயத் துவக்கக் காட்சிகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் சினிமா மற்றும் கார் பந்தய ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி இணையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran