குறிஞ்சிப்பாடி அருகே, 'வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் எங்கள் பகுதிக்கு என்ன செய்தார் அவருக்கு ஓட்டு கேட்க எங்கள் பகுதியில் வரக்கூடாது' என திமுக நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இத்தகைய சூழலில் தான் இவருக்கு திமுகவினர், தொகுதிக்கு உட்பட்ட பெத்தான்குப்பம் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்
இந்நிலையில் அமைச்சருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வரும் போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த சிலர் அமைச்சர் எங்கள் பகுதிக்கு என்ன செய்து உள்ளார். எங்கள் பகுதியில் உள்ள மலைகளை அழித்து மண்ணாக அள்ளி சென்று விட்டார்கள். அதேபோல் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கிச் செருப்பு தொழிற்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அவருக்கு ஏன் வாக்கு கேட்டு வருகிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

