Dailyhunt
அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு; திமுக பிரமுகரின் சட்டையைப் பிடித்து கேள்வியெழுப்பிய பெண்கள்!

அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு; திமுக பிரமுகரின் சட்டையைப் பிடித்து கேள்வியெழுப்பிய பெண்கள்!

மிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு கிராமம் கிராமங்களாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பாக மீண்டும் போட்டியிடும் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அந்த தொகுதி முழுவதும் பொதுமக்களை சந்தித்து தீவிர வாகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், திருச்செந்தூர் தொகுதியில் உள்ள ராமசுப்பிரமணியம், கல்விளை, புளிக்குடியிருப்பு, ஆலந்தலை கிராமங்களுக்கு வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் திமுக நிர்வாகிகளுடன் இன்று (04-04-26) பிரச்சார வாகனத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.

அதன்படி, அனிதா ராதாகிருஷ்ணன் கல்விளை கிராமத்திற்கு பிரச்சார வாகனத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் அந்த வாகனத்தை மறித்து, தங்கள் கிராமத்திற்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்றும் கோயில் பணிக்கு நன்கொடு தருவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் குற்றச்சாட்டை வைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனிதா ராதாகிருஷ்ணனுடன் வந்த திமுக பிரமுகர் ஒருவரின் சட்டையை பிடித்து பெண்கள் கேள்வி எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரச்சாரத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சாரத்தை தொடராமல் பாதியிலேயே அனிதா ராதாகிருஷ்ணன் திரும்பிச் சென்றார். அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran