Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம்!

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மாத ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை, அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் பணிகளைப் புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை அரசு கண்டு கொள்ளாததால் இன்று (22-09-26) பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிதம்பரம் நகரில் உள்ள காந்தி சிலை அருகே தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் ஊழியர் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தால் காந்தி சிலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை அனைத்து அரசு பள்ளிகளிலும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தில் உணவு வழங்கும் அதே நேரத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஊழியர்களை தட்டேந்தி பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran