Dailyhunt
அதிருப்தி காட்டிய கரூர் நிர்வாகிகள்; வேட்பாளர் மாற்றமா?

அதிருப்தி காட்டிய கரூர் நிர்வாகிகள்; வேட்பாளர் மாற்றமா?

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன.

இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமலுக்கு வந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது.

தவெக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை 234 தொகுதிகளிலும் வெளியிடப்பட்டது. அதில் கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் தொகுதியில் மட்டும் திருவாரூர் மாவட்ட செயலாளர் மதன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில், கரூரைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கட்சி தலைமையை வலியுறுத்தியதால் கிருஷ்ணராயபுரம் வேட்பாளர் மதன், கிருஷ்ணராயபுரம் மற்றும் கரூர் நிர்வாகிகளை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் தான் கிருஷ்ணராயபுரம் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக சத்யா என்பவர் போட்டியிட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை அல்லது நாளை தவெக சார்பில் வேட்பாளர் மாற்றப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran