Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"அது லஞ்சம் கிடையாது, கட்டாயப்படுத்தி இருக்காங்க..." - பல்டி அடித்த அமைச்சர் மரிய வில்சன்!

"அது லஞ்சம் கிடையாது, கட்டாயப்படுத்தி இருக்காங்க..." - பல்டி அடித்த அமைச்சர் மரிய வில்சன்!

மிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 24ஆம் தேதி உயர்கல்வித்துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென குறுக்கிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது கடுமையான லஞ்சக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது பள்ளிகளுக்கு அனுமதி வழங்க திமுக ஆட்சியில் லஞ்சம் பெறப்பட்டதாகவும், அதற்கு நானே சாட்சி என்று பேசினார்.

இது தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது, 'சில இடத்தில் கட்டாயப்படுத்தி தான் காசு வாங்கியிருக்கிறார்கள். அதில் மிகவும் பாதிக்கப்பட்ட ஆள் நான். இங்கே ஆதாரம் கேட்கிறார்கள், நானே ஒரு ஆதாரம் தான், நானே ஒரு சாட்சி தான். முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்த அவையில் இல்லை. அவர்கள் என் மீது வழக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும், விசாரணைக்கு நானே வருகிறேன். டி நகரில் எந்த இடத்தில் எவ்வளவு பணம் கொடுத்தோம் என எல்லாம் நானே சொல்ல முடியும். இது தான் சாட்சி. மைனாரிட்டி இன்ஸ்டிடியூஷனுக்கு எவ்வளவு பணம் வாங்குனீங்க என்று நானே சொல்ல முடியும்' என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ், தன் மீதான புகார்களைத் திட்டவட்டமாக மறுத்தார். இந்த சூழலில், லஞ்சம் பெறப்பட்டதாக நிதியமைச்சர் மரிய வில்சன் பேசியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.பெரியார் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதாவது, நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் இது போன்று பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரே நேரடி சாட்சி என்று அவர் கூறியிருப்பதால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? இடைத்தரகர்கள் யாராவது இருந்தார்களா என்பதை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் சட்டசபையில் லஞ்சம் கொடுத்ததாக பேசினீர்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'நான் லஞ்சம் கொடுத்ததாகக் கூறவில்லை. நான் சாட்சியாக தான் இருந்திருக்கிறேன். அது லஞ்சம் கிடையாது. லஞ்சம் என்று சொன்னது அவர்கள் கட்டாயப்படுத்தி இருக்காங்க. முறையாக ஆவணம் இருந்தும் அதற்கு அனுமதி கொடுக்க தாமதித்தார்கள்' என்று கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran