Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'பாசனத்திற்கு தண்ணீர் வேண்டும்...' வீராணம் ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

'பாசனத்திற்கு தண்ணீர் வேண்டும்...' வீராணம் ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

காட்டுமன்னார்கோவில் அருகே திருச்சின்னபுரம் பகுதியில் வீராணம் ஏரிக்குள் முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடைமடை பகுதிகளான காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்காமல், வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக மட்டும் தண்ணீர் அனுப்பப்படுவதை கண்டித்தும் வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எதிராக செயல்படும் நீர்வளத்துறை சிதம்பரம் செயற்பொறியாளரை பணி மாற்றம் செய்ய வேண்டும். கடைமடை வாய்க்கால்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஏரி தண்ணீரில் நின்று கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

தகவலறிந்த சேத்தியாதோப்பு காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் சார் ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran