Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாட்டுப் பாடிய அமைச்சர்; உதயநிதி சொன்ன வார்த்தையால் அவையில் கலகல!

பாட்டுப் பாடிய அமைச்சர்; உதயநிதி சொன்ன வார்த்தையால் அவையில் கலகல!

மிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று (27-08-26) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. ஆனால் நேற்று மாலை நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றதால் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வைத்த கேள்விகளுக்கு பதிலுரை வழங்காமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று (28-08-26) மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அவை கூடியதும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விவகாரம் குறித்து திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பில் எதிர்க்கட்சிகள் வைத்த கேள்விகளுக்கு அத்துறையின் அமைச்சர் சம்பத் குமார் பதிலுரை வழங்கினார்.

அப்போது அவர் பேசும் போது, 'தம்பி நான் படித்தேன் காஞ்சியில் நேற்று...மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்...தன் மக்கள் நலம் ஒன்றை தான் மனதில் கொள்ளுவார்' என்ற எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றை பாடினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், 'மக்களுக்காக கிள்ளி கொடுத்து தன் மக்களுக்காக அள்ளி கொடுத்ததை தான் அன்றைக்கு எம்.ஜி.ஆர் பாடினார்' என்றுக் கூறிக் கொண்டிருக்கும் போது அமைச்சர் பதிலுரை வழங்காமல் பாடல் பாடியதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'நேற்று சொல்லிருக்க வேண்டிய பதில், இன்று தான் அமைச்சர் ஆரம்பித்திருக்கிறார். பாட்டு பாட ஆரம்பித்திருக்கிறார். இதற்கு சாட்சிக்கு என்னை வேற கூப்பிட்டிருக்கார், அதனால் நாங்கள் பதில் சொல்லி தான் ஆக வேண்டும்' என்று நகைச்சுவையாக பேச அவையில் சிரிப்பலை எழுந்தது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran