Monday, 24 Jul, 5.46 am நக்கீரன்

முக்கிய செய்திகள்
போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?


போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?


திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நசரத்பேட்டையில் இயங்கி வரும் திருப்பெரும்பூதூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் விற்பனையாளராக செங்குட்டுவன் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள காட்டுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவர் 5.08.1992ல் கூட்டுறவு சங்கத்தில்10ம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

ஆனால் இவர் காட்டுபாக்கத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாதிரி போலி சான்றிதழ்களை வாங்கியுள்ளார். உண்மையில் இவர் காட்டுபாக்கம் பள்ளியில் எந்த வகுப்புமே படிக்கவில்லை, மேலும் அந்த பள்ளியில் அந்த ஆண்டில் படித்தவர்கள் பட்டியலிலும், வருகைபதிவேட்டிலும், அவரது பெயர் இல்லை என அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்கள் சார்பில் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்க இணைபதிவாளர், அரசு செயலாளர் கூட்டுறவு துறை, அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகாரின் பெயரில் இதுவரை இவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சோ.மதுமதி ஐ.ஏ.எஸ்., அதிகாரி தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூட்டுறவு சங்கங்களின் எந்த பிரிவிலும் ஊழல், தவறு நடந்திருந்தாலும் கண்டுபிடிப்பதற்கு அரசு தனியாக ஒரு விஜிலென்ஸ் குழு அமைத்துள்ளதாகவும், இந்த கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் தவறு செய்யப்பட்டுள்ளார்கள் என பத்திரிக்கை மூலமாகவோ, புகார் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுவரை செங்குட்டுவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- தேவேந்திரன்
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran
Top