சென்னையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோரின் போஸ்டர்கள் மர்ம நபர்களால் அவமதிப்பு செய்யப்பட்டதாக திமுகவினர் ஒன்று கூடி கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து திமுக நபர் ஒருவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், ''சமூக விரோதிகளால் நேற்று இரவு 36ஆவது வட்டம் மாணவர் அணி சார்பாக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தை கிழித்து சேதப்படுத்தி உள்ளார்கள். அவர்கள் மீது பி6 காவல் நிலையத்தில் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் மீது போஸ்டரை கிழித்து அவமதித்த மர்ம நபர்களை இன்றைக்குள் காவல்துறை கைது செய்யவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு திமுக முற்படும் என்பதை இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளனர்.

