போதமலை காடுகளில் இருந்து உடல் சூட்டை தணிக்கும் மாகாளிக் கிழங்கு கடத்திய ஐந்து பேர் கைது

Wednesday, 31 May, 9.30 am

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், கீழூர் ஊராட்சிக்கு உட்பட்டது போதமலை. இங்கிருந்து அரியவகை மூலிகைகள் மற்றும் மாகாளிக்கிழங்குகள் வெட்டி கடத்தப்படுவதாக நாமக்கல் மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா உத்தரவின்பேரில் இராசிபுரம் வனச்சரக அலுவலர் தங்கராஜ் தலைமையில் வனவர் சேகர், வனக்காவலர் முருகன் மற்றும் வனத்துறையினர் போதமலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, போதமலை காப்புக்காட்டில் இருந்து வேடப்பட்டி வழியாக ஒரு கார் சேலம் நோக்கி சென்றது. வனத்துறையினர் அந்த காரை நிறுத்தினார்கள்.