புதுச்சேரியில் இன்று வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், என்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான என்.ஆர். ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட என். ரங்கசாமி 5,456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

