Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"எடப்பாடி பழனிசாமி ஏமாற்றம் அடைவார்" - நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு பேட்டி!

"எடப்பாடி பழனிசாமி ஏமாற்றம் அடைவார்" - நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு பேட்டி!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் எஸ்.பி.

வேலுமணி, தவெக அமைச்சர் செங்கோட்டையன் அருகே அமர்ந்து பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இத்தகைய சூழலில் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நேற்று (21-11-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் அமைச்சர் செங்கோட்டையனும், எஸ்.பி. வேலுமணியும் திருமண விழாவில் ஒன்றாக இருந்தது தொடர்பாக பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அ.தி.மு.க.வின் 2 கோடி உறுப்பினர்களில் எஸ்.பி. வேலுமணியும் ஒருவர், அவரை பற்றி இங்குக் கேள்வி எழுப்ப வேண்டாம் எனத் தெரிவித்தார். அதற்கு, தொண்டன் ஒரு முடிவு எடுத்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என எஸ்.பி.வேலுமணி நேற்று இரவு அறிக்கை மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்தார்.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் அதிமுகவுக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஏமாற்றம் ஏற்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நத்தம் விஸ்வநாதன், 'அதிமுக எம்.எல்.ஏக்கள் முழுவதும் ஒன்றாக இருக்கிறார்களே தவிர, தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பது போல் தான் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு தான் 47 எம்.எல்.ஏக்களும் இருக்கிறார்கள் என சொல்ல முடியாது. அவருக்கு காலம் தான் பதில் சொல்லும்.

6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரப்போகிறது, அந்த இடைத்தேர்தல் முடிவுகளை மக்கள் பார்ப்பார்கள். இடைத்தேர்தலுக்குப் பிறகு அரசியல் மாற்றம் நிச்சயம் வரும். யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன், நான் மட்டும் இருந்தால் போதும், வேறு யாரும் தேவையில்லௌ என எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தார் என்றால் அந்த முடிவை பார்த்து அவரே ஏமாற்றம் அடைவார்' என்று கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran