Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'ஈரான் விவகாரத்தில் அவசரப்படமாட்டேன்'; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி

'ஈரான் விவகாரத்தில் அவசரப்படமாட்டேன்'; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, அமெரிக்காவிற்குத் திரும்பும்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, அவரிடம் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ' எங்களிடம் போர்த் திட்டம் இருக்கிறது. இருப்பினும், ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கும்? என பார்ப்போம். நான் அப்போது உங்களிடம் இது குறித்துப் பேசுகிறேன்.

ஈரான் மீது பொருளாதாரத் தடை மற்றும் அழுத்தம் தொடர்ந்து இருப்பதால், இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில், ஈரான் விவகாரத்தில் நான் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டேன்' என்று கூறியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற அமெரிக்க இடக்காலத் தேர்தலில் ட்ரம்ப் படு தோல்வியைச் சந்தித்துள்ளார். இந்த தோல்விக்குக் காரணம் ஈரான் மீதான போர் தான் எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த தேர்தல் தோல்வியுற்றதால் ஈரான் விஷயத்தில் முடிவெடுக்க டிரம்ப் தயங்குவதாகச் சொல்லப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran