Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"எதற்காகப் பதவி விலகினோம்?" - மரகதம் குமரவேல் பரபரப்பு பேட்டி!

"எதற்காகப் பதவி விலகினோம்?" - மரகதம் குமரவேல் பரபரப்பு பேட்டி!

திமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல், பெருந்துறை - ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் (தனி) - சத்யபாமா ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்த சம்பவம் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எதற்காக பதவி விலகினோம் என்பதை தெரிவிப்பதற்காக பதவி விலகிய 3 மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது மரகதம் குமரவேல் அளித்த பேட்டியில், 'தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நாங்கள் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் இன்றைய தினம் முழு மனதோடு கழகத்தில் இணைந்து கொண்டோம்.

இன்றைய தினம் பேரவை தலைரை சந்தித்து மதுராந்தகம் தொகுதி, பெருந்துறை தொகுதி தாராபுரம் தொகுதி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதியிலும் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல் போட்டியிட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்திருக்கின்றார்கள். நாங்கள் எதற்கு பதவி விலகினோம் என்ற காரணத்தை இந்த நேரத்தில் மக்களிடத்தில் தெளிவாக வெளிப்படுத்த விரும்புகின்றோம். தேர்தல் முடிவு மே நான்காம் தேதி வெளியான பிறகு ஏழாம் தேதியிலிருந்து பல்வேறு பிரச்சனைகள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தொடர்ந்து நடந்தது. தலைமைக்குழு நிர்வாகிகள் கலந்து ஆலோசனை செய்தார்கள். இரண்டு நிலைப்பாடு எடுத்தார்கள். ஒன்று திமுகவோடு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்தார்கள். இன்னொன்று த.வெ.கவுடன் ஆதரவு கொடுத்து ஆளுங்கட்சி போல் நம்முடைய தொகுதியில் மக்கள் பணியாற்ற முடியும். மக்களுடைய கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்ற இரண்டு நிலைப்பாட்டை எடுத்தார்கள்.

எங்களுக்கெல்லாம் திராவிட முன்னேற்ற கழகத்தோடு சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு விருப்பமில்லை. அங்கு இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மனதிலும் அதுதான் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. நாங்கள் முன்னதாக முடிவு எடுத்துவிட்டோம். அதேபோன்று சி.வி. சண்முகம் தலைமையில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டார்கள். காரணம் இதேதான். திராவிட முன்னேற்ற கழகத்தோடு சேர்ந்து ஆட்சி அமைக்க கூடாது என்பதற்காகதான் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்டோம். நாங்கள் தவெக ஆதரவு நிலைப்பாடுதான் எடுத்தோம். நாங்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்துதான் ஆதரவு கொடுத்தோமே தவிர நாங்கள் கட்சியை விட்டு போகவில்லை. ஆனால் அன்றைய தினத்திலிருந்தே சமூக வளத்தளங்களிலும் அனைத்து ஊடகங்களிலும் எங்களைப் பற்றி அவதூறாக பல்வேறு விமர்சனங்களை எங்கள் மீது வைத்திருந்தார்கள்.

எங்களுடைய நிலைப்பாடு என்னவென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 54 ஆண்டு காலமாக ஒரு வீரநடை போட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மாபெரும் இயக்கம். அந்த இயக்கத்திற்கு துரோகம் செய்கின்ற வகையில் திராவிட முன்னேற்ற கழகத்துடன் ஆட்சி அமைப்பதற்கு எங்களுடைய மனம் விரும்பவில்லை. எங்களை போன்றவர்கள் அங்கு இருக்கின்றார்கள். நாங்கள் முன்னதாக இந்த முடிவு எடுத்திருக்கின்றோம். அதேபோன்று தொகுதியில் எங்களை பற்றி அவதூறாக பரப்பி எங்களுடைய கழகத்தை சார்ந்தவர்களே எங்களை பற்றி எவ்வளவு விமர்சனங்கள் செய்ய வேண்டுமோ அந்த அளவிற்கு விமர்சனம் செய்திருக்கின்றார்கள்.

எங்களுடைய நிலைப்பாடு என்னவென்றால் ஏற்கனவே எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2021இல் மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நானும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயகுமாருக்கும் தான் தெரியும் அதோட கஷ்டம். கடந்த ஐந்து வருட காலமாக மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் எங்களால் அவருடைய கோரிக்கைகள் நிறைவேற்ற முடியவில்லை. அதிகார அளவிலும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்தார்கள். நாங்கள் சட்டமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் ஒரு 10% வாக்குறுதி 10% கோரிக்கை கூட நிறைவேற்ற நிறைவேற்றவில்லை.

எங்களுடைய மதராந்தகம் தொகுதியில் அதே போன்று இந்த முறையும் நாங்கள் எதிர்கட்சியாக செயல்பட முடியாது. ஏனென்றால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் 2026ல் நாங்கள் மக்களை சந்திக்கின்ற பொழுது கடந்த முறையும் நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த போது எதையும் நீங்கள் செய்யவில்லை. இந்த முறையாவது வெற்றி பெற வெற்றி பெற வைக்கிறோம். நீங்கள் எங்களுடைய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று எங்களிடத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து என்னுடைய மதுராந்தகம் தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற வைத்திருக்கின்றார்கள். அவர்களுடைய உணர்வுகளை புரிந்துதான் நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றோம்.

இது எங்களுடைய தனிப்பட்ட நிலைப்பாடுதான். நாங்கள் சுய நலத்துக்காக எடுக்கவில்லை. சுய மரியாதைக்காகவும் எங்களுடைய தொகுதி மக்களுடைய நலனுக்காகவும் தான் இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம். அதே போன்று இன்றைய தினம் நாங்கள் பேரவை த தலைவரிடம் கடிதம் கொடுத்திருக்கின்றோம். அதேபோன்று முதல்வர் விஜய்யை சந்தித்து அவரிடம் நாங்கள் வாழ்த்து பெற்றிருக்கின்றோம். நாங்கள் இந்த நிலைப்பாட்டை ஏன் எடுத்திருக்கின்றோம் என்றால் ஜெயலலிதா எப்பொழுதும் ஆட்சி பொறுப்பில் ஏற்கின்ற பொழுது முதல் கையெழுத்து பெண்களுக்குடைய பாதுகாப்பிலும் பெண்கள் நலனை சார்ந்த திட்டங்களை எல்லாம் அறிவிப்பார். அதே போன்றுதான் முதல்வர் விஜய் அவர் முதலமைச்சராக பதவியேற்ற முதல் கையெழுத்தே பெண்கள் நலனை சார்ந்த திட்டங்களை அறிவித்திருக்கின்றார்.

அதேபோன்று இதுக்கு ஒரு படி மேலாக சொல்ல வேண்டும் என்றால் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகத்தை திராவிட முன்னேற்ற கழகம் கடந்த ஆட்சியில் வந்த உடனே மூடிவிட்டார்கள். ஒரு ஏழை எளிய மக்கள் வயிராற சாப்பிடுகின்ற அந்த திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். ஆனால் நாங்களும், எந்த மக்களும் கோரிக்கை வைக்கவில்லை. ஒரு தாய் உள்ளத்தோடு ஜெயலலிதா கொடுத்த திட்டத்தை அவர்கள் மூடிவிட்டார்கள். ஆனால் முதல்வர் விஜய் அவர்கள் பதிவேற்ற பிறகு அம்மா உணவகம் மீண்டும் அமல்படுத்துவதற்காக அறிவித்திருக்கின்றார். இதையெல்லாம்தான் உணர்வு பூர்வமாக நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோன்று அவர் பதவி ஏற்று 15 நாட்கள் கூட ஆகவில்லை. பல்வேறு திட்டங்களை மக்களுக்காக தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கின்றார். மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நல்ல ஆட்சி கொடுப்பார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. எங்களுடைய மதுராந்தகம் தொகுதி மக்களுடைய நலனை கருதி மட்டும்தான் நாங்கள் தமிழக வெற்றி கழகத்தில் மனப்பூர்வமாக இணைந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran