Dailyhunt
எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி: ரயில் சேவைகளில் மாற்றம்!

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி: ரயில் சேவைகளில் மாற்றம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் மற்றும் நடைமேடைகளைச் சீரமைக்கும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் காரணமாக, குறிப்பிட்ட சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

அதன்படி, திருநெல்வேலியிலிருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12632) ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை தாம்பரத்துடன் தனது சேவையை நிறைவு செய்யும். அதேபோன்று, ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16752) ஏப்ரல் 6ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் ஹைதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் (12760) இன்று (05.04.2026) முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஏபரல் 22ஆம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கும். சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16751) ஏப்ரல் 7ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்தும், தாம்பரம் - ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் (12759) ஏப்ரல் 6 முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்தும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் ரயில் சேவைகளின் பயண மாற்றங்களைக் கவனித்துத் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran